அழகிய பெண் அவள்

பவ்ய பாவையாய்

என் பைக்கில் வந்தவள்

கால்மேல் கால் போட்டு

கேள்வி கேட்கிறாள்

ஒய்யாரமாய்!

நான் வாங்கிவரச்சொன்ன

ஐஸ்கிரீம் எங்கே என்று


மாட்டிக்கொண்டேனே

அறியாமல் மாங்காய் பறித்த

சிறுவன் போல்

கைகட்டி அவள் முன்னே நான்


இவள் அப்பன் என்ன

பதினெட்டுபட்டி நாட்டாமையா

பெரிதாய் பஞ்சாயத்து செய்கிறாள்

வண்டிமேல் உட்கார்ந்து


கைகளில் தந்தது போதாதென்று

கால்களை வேறு ஆட்டிக்கொண்டிருக்கிறாள்


என்னிஸ்டம் கொண்டா சென்றேன்

இவளிஸ்டம் வாங்க


எப்படிச் சொல்லுவேன்


புதுமையாய் பதுமை

கைகளில் ஐஸ்கிரீமுடன்

புன்னகையாய்

கடந்து செல்கிறாள்


என் மனம் உறுகியது

வெப்பத்தின் தாக்கத்தால்

அவள் ஐஸ்கிரிம்

உறுகியதைவிட



என் இதயமே விழுந்தது

சாப்பிடத் தெரியாமல்

அவள் சாப்பிட்டு விரல்களில் எல்லாம்

விழுந்தவை கண்டு


உனை எங்கு நினைத்தேன்

அவள் ஐஸ்கிரீம் உறுகியதில்

நானும் உறுகினேன்

என் கையில் இருந்த

உன் ஐஸ்ம் உறுகியது



உண்மையில் ஓர் அழகியை

இன்றே கண்டேன்

பல நன்றை அவளில்

ஒன்றாய் கண்டென்

எல்லாம் உறுகியதென்று

எப்படிச் சொல்லுவேன்


எப்படி அவளை மீண்டும் பார்ப்பேனொவென

நானெ நினைத்திருக்க

எப்படி கண்டுபிடித்தாய்

தினம் ஓர் ஐஸ்கிரீம்

வேண்டுமென்றாயே!


Bookmark and Share

பெண் மனம்


பெண் மனம்

பெரும் ஆழ்கடல்

ஒத்திசைந்தால் முத்(தம்)தெடுக்கலாம்

மாற்றிசைந்தால்

பித்தெனெனப் பெயர் எடுக்கலாம்

உலகுக்கும் விடை கொடுக்கலாம்


Bookmark and Share

கலைஞனின் வருமை


வீட்டினில் வருமை!

இருந்தும் எழுதுகிறான்

அறுசுவையில் பாடல்!


வயிற்றினில் குறையிருந்தும்

வரியினில் குறைவின்றி

எழுதுகிறான் பாடல்!



கலை இவன் நிலையறிந்தும்

எட்ட நிற்கும் நிலை
!


என்று மாறுமோ கலைஞனின்

இந்நிலை!



Bookmark and Share

தினம் உன்னை பார்க்க வேண்டும்




தினம் உன்னை


பார்க்க வேண்டும்

என்பதற்காகவே

டியூசன் எடுக்கிறேன்

நடத்துனர் பையன்களுக்கு

ஜன்னல் ஓர இருக்கை வேண்டி


Bookmark and Share

நடிப்பும் தானகவே வருகிறது நீ வேண்டுமென்று



உடைந்துபோன உன்

வளையல்களை

மேஜையில் கண்டதால்

அம்மாவிடம் கன்னத்தில் அறை

நீயே விளையாட கொடுத்துவிட்டு

அறைகிறாயேயென

அழுகையில் நான்

குழந்தை பருவத்தில்

அவள் கொடுத்த வளையல்கள்

இவையென்றென்னி

சங்கடத்தில் சென்றுவிட்டால்

எனதருமை தாய்!



நடிப்பும் தானாகவே வருகிறது

நீ வேண்டுமென்று!



Bookmark and Share

அவள் கடைக்கண் பார்வையில்




சிறுவயதில்

ஒளிந்து விளையாடும்போது

நான் வருகிறேனாவென

மெல்ல தலைநீட்டி

கண்களில் அங்குமிங்கும்

தேடியவள் - இன்று

மீண்டும் எனை சிறுவயதிற்கே

அழைத்துச் செல்கிறாள்


அவள் தந்தையுடன் செல்லும்போது

திரும்பிப் பார்த்த

அவள் கடைக்கண் பார்வையில்



Bookmark and Share

ஹார்மோன் மாற்றம்



தந்தை வரவில்லையென்று


தானும் உண்ணாமல் உறங்காமல்

அழுது காத்துக்கிடந்தவள்


இன்று தானில்லாமல்

தந்தை உண்ணாமல் உறங்காமல்

அழுதுகிடக்க வைக்கிறாள்


Bookmark and Share

பூக்களின் வேதனை



உங்கள் ம(ண)னம் கொண்டவர்கள்

சுவாசத்திற்கு - எங்கள்

வாசம் வேண்டுமென்று

பிரித்து செல்லாதீர்கள்

எங்கள் உயிரின் நேசத்தை!


Bookmark and Share

மீண்டும் வா - நான் தெளிந்திட வா!


சலனமற்றுக் கிடந்த

என் மனக்குளத்தில்

உன் பார்வை கணையை

எய்துவிட்டு சென்றவளே


கலங்கி கிடக்கிறேன்

உன் கணையலைகளால்

மீண்டும் வா - நான்

தெளிந்திட வா!

Bookmark and Share

காதலி கரைகிறாள் - காகம் கரைகிறது



அம்மா சொல்கிறாள்

எழுந்திரு

காகம் கரைகிறது

உறவினர் வரலாம்

வண்டி நிறுத்தம் செல்லென்று!


என் தாய்க்கு தெரியுமா

உன் பாட்டி சுட்ட வடைகளை

எனை அழைக்க

உன் தந்தைக்கு தராமல்

என்வீட்டுமேல் எறிந்தவள் நீயென்று!


Bookmark and Share

உறவுகள்



தண்டவாளத்தின்

இணைகோடுகள்

ஒன்றிணைந்தாலும்

ஒன்று பிரிந்தாலும்

பயணம் இரத்தாகும்!


Bookmark and Share

லப் டப்



என்னுள் இருக்கும்

நீ கேட்க

என் இதயத்தின்

மெல்லிசை


Bookmark and Share

அவளின் நினைவுப் பரிசு



பெண்ணே

என்றும் எதிலும் நீயாக

நினைவுகளில் இருக்கிறாய்!


அன்றொரு நாள்

சந்தையில் - நீயென

உன் அக்கா

தோள் தொட்டுவிட்டேன்!


பின் என்ன

உன் வீட்டு காய்கறிகளை

தூக்கி வந்தேன்

கூலிக்காரனாய்
!


உன் வீட்டு முற்றத்திற்கு

ஒரு ரூபாய்காக!


Bookmark and Share

பிரிவு


இருவரும் ஒருவராய்

ஓர் பாதையில்!


பிரிகிறது

இருவேறு பாதைகளில்

மாற்றம் வேண்டி!


Bookmark and Share

அழுகை



நெஞ்சத்தில்


பூகம்பம்!


கண்களில்
சுனாமி!



Bookmark and Share

இடநெருக்கடி



இரவு மணி பத்து

மகள் கணவருடன்

அப்பா வீட்டில்!


வீட்டு திண்ணையில்

அப்பா! அம்மா!


Bookmark and Share

விருதுகளுக்காக வாழவில்லை


புகழுக்கு வாழ்பவரல்ல இவர்

கிடைத்த புண்ணியம் தொடர வாழ்பவர்

தகுதிக்கு தந்திருப்பின்

இருபதுகள் முன்பே

தந்திருக்க வேண்டும்

விரல் சப்பும் சிறுவனுக்கு

விருதெனும்போது

அவன் நடக்க கற்றுத் தந்தவனுக்கு

விருதில்லாமல் போனால்

சாலையில் பைத்தியமாய்

திரிபவனும் சாணியெறிவானென

இவ்விருது!

********
(உயர் விருதுகளை மதிக்கிறோம். தரும் விருதுகளை காலத்தே திறமையறிந்து கொடுங்கல். குற்றம் சொல்வார்களேயென தராதீர்கள் - இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. காலத்தேகிட்டா எதும் பயன்தராதென நம்பும் மக்களின் கருத்து)


Bookmark and Share

தமிழன் என்று சொல்லடா


தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா

உனக்கு முன்னே பலபேரடா

இவர்களில் நீயும் வந்து நில்லடா

பாரும் வியக்கும் பாரடா

Bookmark and Share

காத்திரு!


வெள்ளம் வந்தால்

கரையில் ஊறும் எறும்பும்

இரையாகும் மீனுக்கு


வெள்ளம் ஓய்ந்தால்

அம்மீனோ இரையாகும் எறும்புக்கு


காலங்கள் மாறும்

ஏற்றங்கள் மறையும்

தடங்கல்கள் அகலும்

வழிகள் பிறக்கும்

காத்திரு!

Bookmark and Share

அவளின் முத்தம்




உலக வங்கியிடம்


நிற்பதைப்போல் நான்

மொத்தமாய் வேண்டாம்

சொச்சமாயாவது தா

சொர்கமாய் ஏற்கிறேன்

Bookmark and Share

மலர்ந்தும் மனக்கவில்லை



மலர்ந்தும் மனக்கவில்லை

அவள் வைத்த மல்லிகை

அவள் ம(ண)னக்க மறந்ததால்!

Bookmark and Share

சுமை


சிறைபட்டுக் கிடக்கும் குடும்பம்

சிறியவனின் தலையில்

பெரியவர்களின் பாரம்

Bookmark and Share

தொலைக்காட்சித் தொடர்



சமூகத்தில்


தொலைந்த பல காட்சிகளை

தினம் காட்டி

உறவுகளில் பிரிவுகளை தெளித்திடும்

காட்சித் தொடர்

Bookmark and Share

நான் உஷ்ணமாக!


பெண்ணே

குளிரில் நான் நடுங்கும்போதெல்லாம்

உன்னை மட்டும் நினைத்துக்கொள்கிறேன்

வேண்டுமென்றே திட்டிப்பிரிந்த

உன் வார்த்தைகளின் நினைவுகளால்


நான் உஷ்ணமாக!

Bookmark and Share

வண்ண மலர்களும் காத்திருக்கிறது




வண்ண மலர்களும் காத்திருக்கிறது

உன் கூந்தலில் தவழ

நானோ குழம்பி நிற்கிறேன்

எந்நிற ஆடையில் நீ வருவாயென

மலர் விற்பவளோ பார்வையிலே

என்னை சுட்டுவிடுகிறாள்

உன் ஆடையின் நிறத்தில் இல்லையென்று

நான் திருப்பித்தந்த மலர்களை

பார்த்தபோது!

*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை


Bookmark and Share

கவிதையே உனக்கும் தெரிந்துவிட்டதா



கவிதையே


மகிழ்ச்சியில இருக்கும்போது

பலமுறை அழைத்திருக்கிறேன்

நன்றாய் இருக்குமென்று! - நீயேன்

எப்போதும் சோகத்தல் இருக்கும்போதே வருகிறாய்


உனக்கும் தெரிந்துவிட்டதா

ஆறுதலுக்கு ஒருவருமில்லையென்று

Bookmark and Share

மதுவிலக்கு


வீட்டில் கூரையாய்

வேலியில் தடுப்பாய்

பந்தலில் எடுப்பாய்

தெய்வத்திற்கு படைப்பாய்

என் உடல் குளிர்ப்பாய்

விருந்திற்கு இனிப்பாய்

என் வாசலுக்கு பெருக்காய்

என அனைத்தும் நன்மைதர

உன் பதநீரேன் விலக்கானது!


ஓ உன் பதநீர் விட்டால்

பண நீர் கிட்டாதென்றா

இதில் மட்டும் விலக்கானாய்!

Bookmark and Share

ஜோதியிழந்து நிற்கும் யார் இவர்கள்?




இறைவனின் பெயரால் ஆசிரமங்கள்

ஆன்மீக உணர்வுகளை

வளர்க்கவேண்டிய இவர்கள்

வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்

ஆண்களில் உணர்வுகளை!


இவர்கள் சாமியார்களல்ல

சாமி யார் இவர்கள்?

ஜோதியில் ஐக்கியமாவோமென்றுசொல்லி

ஜோதியிழந்து நிற்கும் யார் இவர்கள்?


கடவுள்களின் லீலைகள் போய்


கயவர்களின் லீலைகள்

கடவுளின் பெயரில்!


Bookmark and Share

கருணையின் உருவம்



இன்பத்தை கருவாக்கினால்


இதயத்தை கல்லாக்கினால்

இறக்கமின்றி சிசுவை

வீதியிலெறிந்தால்


பிள்ளையை பெற்றவள்!



இதயமே கருணையாய்

இறைவனின் அவதாரமாய்

இல்லத்தின் வாசலைத் திறந்தாள்

தேசம் போற்றும் தாய்

அன்னை தெரசா!

*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை

Bookmark and Share

ஜனநாயகம்




மக்களுக்கு ஊழியம்
செய்வதாய் கூறி

அரசின் ஊழியர் மக்களிடம்

அட்டூழியமாய்

வாங்கிக் குவிக்கிறார்கள்

பலவகையில் ஊதியம்!

தட்டிக்கேட்கவேண்டிய தலைமையோ

கையூட்டு தந்தே

கையில் ஓட்டுபெற்றேன்

பலமுறையென்கிறார்

Bookmark and Share

முரண்பாடு


நாணயமானவர்கள் தேவை

ஓர் வட்டிக்கடை

விளம்பரம்


Bookmark and Share

நான் என்ன செய்வேன்


நிலவே
நீயும் படித்தாயா
என் காதலியிடமிருந்து!

ஏன் இப்படி ஓடுகிறாய்

காண்பவரெல்லாம்
வெட்கத்தில் ஓடினாள்
நான் என்ன செய்வேன்!


Bookmark and Share

சத்திரம் தேடி


என் கன்னத்தில் பதிந்த முத்தம்
என் உடலெங்கும் தொடர!

வான்மகள் முத்தமழை - சொரிந்துகொண்டிருந்தால்!

மின்னலென
கண் விழித்து பார்த்தால்!

என் அங்கம் மறைத்திருந்ததோ
ஓர் கந்தல் துணி!

எள்ளி நகையாடினால் இடியென!

வெட்கத்தில் நிலவு மகளும்
அடைக்கலம் புகுந்தால்
மேகமகளிடம்!

ஓடினேன் சத்திரம் தேடி !

என் சாலையோர தூக்கத்தை மழை கலைத்ததால்!

*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை

Bookmark and Share

உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்





கருவாச்சி காவியமெழுத

நான் வைரமுத்துவல்ல!

கிறுக்கல்கள் எழுத
நான் பார்த்திபனுல்ல!

எண்ணங்களை ஓவியமாய் வடித்திட
நான் ராஜா ரவிவர்மனுமல்ல!

என் உள்ளத்தின் உணர்வுகளை
வரைந்திருக்கிறேன்
உன் பதிலுக்காக!

Bookmark and Share

மீன் விழியாளே உன் தந்தைக்காக





மீன் வளர்த்தேன்


உன் மீன் விழி கண்டு!


கொஞ்சிப் பேசும் கிளி வளர்த்தேன்

உன் சிணுங்கல்கள் கண்டு!


எனை நீ சுற்றுவது கண்டு

உன் செல்லப்பூனை வளர்த்தேன்!


நாய் வளர்க்கிறேன்

உன்னைக் கேட்க வந்த என்னை கடித்துக்குதறிய

உன் தந்தைக்காக!

Bookmark and Share

உன் கன்னங்களில் என் எண்ணம்போல் கொடுக்கலாமென்று



பெண்ணே


சமயத்தில் விளையாட்டென்ற பெயரில்

நீ சேட்டைகள் பல செய்யும் போது

ஆசையில் நினைத்திருக்கிறேன்!



உன் கன்னங்களில் என் எண்ணம்போல்

கொடுக்கலாமென்று





Bookmark and Share

அமைதியை தேடி இமயம் செல்லும் மனிதா




அமைதியை தேடி

இமயம் செல்லும் மனிதா!


உன் இதயம் நாடி

அமைதியை பெறு!


உயரே இருக்கும்

இமயம் வேண்டாம்!

உன்னுள் இருக்கும்

இதயமே போதும்!

Bookmark and Share

நட்பு




வெகுமதிக்காய்

வருவதல்ல நட்பு


வெகுவாய் மதிப்பதால்

வருவதே நட்பு!

Bookmark and Share

மறந்துவிடச்சொல்லிவிட்டாய் - என் இதயம் நின்றுவிட்டது



என்னுயிர் காதலியே!


அன்றொரு நாள் கோபத்தில் நீ

மறந்துவிடச்சொல்லிவிட்டாய் - என்

இதயம் நின்றுவிட்டது

வைத்தியர் கேட்டார்

இதயம் துடிக்கிறதாவென்று

இதயம் உறங்குகிறது

நான்தான் துடிக்கிறேனென்றேன்.

Bookmark and Share

பெண்ணே உன் பெயரில் ஓர் புகார் காவல்துறையில்



பெண்ணே

புகார் கொடுக்கலாமென்றிருக்கிறேன்

காவல்துறையில்!


இவள் சாலையில் வரும்போது தான்

விபத்துகள் ஏற்படுகின்றனவென்று!

Bookmark and Share

தானும் ஓர் செய்தியாய்! - மறைந்து போகிறாள்




புத்தகத்தை படித்துக்கொண்டு

சிரித்தவள் - இன்று

கைபேசியை பார்த்து சிரிக்கிறாள்


புத்தகங்களின் பக்கங்களை மாற்றியவள் - இன்று
கைபேசியின் எண்களை மாற்றிக்கொண்டிருக்கிறாள்!


சமூக கொடுமை செய்திகளை படித்தவள் - இன்று
தானும் ஓர் செய்தியாய்! - மறைந்து போகிறாள்


Bookmark and Share

என்னுயிர் ரோஜாவே - தோட்டத்தை பிரியாதே



என்னுயிர் ரோஜாவே


உன் இதழ்கள் கண்டே உனைக் காதலித்தேன்

என் இதழ் தந்தவுடன்

ஏன் இப்படி உதிர்ந்தாய்

இன்று புரிந்துகொண்டேன்

ஏன் ரோஜாக்கள் உதிர்கின்றனவென்று

உன் வாழ்வு (வளர்ச்சி) தோட்டத்தில்தான்

பிரியாதே பின் துயராதே!

காதலில் மயங்கி பின் பிரிவோர் - மறைவோர் நிலைகண்டு ஓர் புலம்பல்
Bookmark and Share

தனித்துக் காத்திருக்கிறேன்



உனக்காய் காத்திருக்கும்

ஒவ்வோர் நொடியும்!

கண்முன் அனைத்தும் நீயாய்

தவித்துப்போகிறேன்!

தாமதிக்காதே

கண்முன் வா!

Bookmark and Share

பெண்ணே எங்கே கற்றாய் "அந்த" வைத்தியத்தை



பெண்ணே

சாலையில் உன்னைக் கண்டதால்

என் கால்களில் ஓர் பிரட்சி

உச்சவேதனை

நரம்பு மண்டலத்தில்!

ஒரு கணம் அனைத்தும் மறந்தது

உன் பார்வையில்!

Bookmark and Share

கட்டணமின்றி ஆன்லைனில் வேலைகள் - நேரத்தை மட்டும் செலவாக்குங்கள்




கட்டணமின்றி ஆன்லைனில் வேலைகள்

பல காத்திருக்கிறது!

நேரத்தை மட்டும் செலவாக்குங்கள்

பயனடையுங்கள்

மேலும் தகவல்கள் மற்றும் ஆன்லைன் வேலைகளுக்கு
பார்க்க http://www.thegenuineonlinejobs.com



Bookmark and Share
Related Posts with Thumbnails