முல்லை பெரியாறு

வாடிய பயிரும்
ரத்தம் சொரிகிறதே!

முல்லையே உன்
உள்ளம் திறந்திட!Bookmark and Share

முல்லை பெரியாறு

மறந்த வேற்றுமை
மீண்டும் வருகிறது
ஜனத்தை பிரிக்க
ஜலத்தை காட்டி!


முள்ளி வாய்க்காலில்
கொள்ளி வைத்தான்
இடையில் வந்தவன்!

முல்லை பெரியாறில்
கொள்கை மறந்தான்
இடுக்கியில் இருந்தவன் !

முள்ளியில் மறந்ததை
முல்லையில் மறக்கலையே
துரோகம் செய்தால்
மன்னியோம்
திருப்பித் தருவோம்
அது முல்லையானாலும் சரி
முள்ளியானாலும் சரி


இனி இது முல்லைபெரியாறல்ல
முள்ளில் பெரியாறு!
Bookmark and Share

நிலவும் இளைத்தது

அந்த பதினைந்து நாட்கள்
தேர்வு நேரம்
இளைத்துப் போனது
நான் மட்டுமல்ல
நிலவும் தான்!

படிக்க முடிக்க
எத்தனையோ இருந்தும்
அனைத்தும் மறந்துபோனது
உன் விழி காணாமலே!

Bookmark and Share
Related Posts with Thumbnails