தினம் உன்னை பார்க்க வேண்டும்
தினம் உன்னை


பார்க்க வேண்டும்

என்பதற்காகவே

டியூசன் எடுக்கிறேன்

நடத்துனர் பையன்களுக்கு

ஜன்னல் ஓர இருக்கை வேண்டி


Bookmark and Share

நடிப்பும் தானகவே வருகிறது நீ வேண்டுமென்றுஉடைந்துபோன உன்

வளையல்களை

மேஜையில் கண்டதால்

அம்மாவிடம் கன்னத்தில் அறை

நீயே விளையாட கொடுத்துவிட்டு

அறைகிறாயேயென

அழுகையில் நான்

குழந்தை பருவத்தில்

அவள் கொடுத்த வளையல்கள்

இவையென்றென்னி

சங்கடத்தில் சென்றுவிட்டால்

எனதருமை தாய்!நடிப்பும் தானாகவே வருகிறது

நீ வேண்டுமென்று!Bookmark and Share

அவள் கடைக்கண் பார்வையில்
சிறுவயதில்

ஒளிந்து விளையாடும்போது

நான் வருகிறேனாவென

மெல்ல தலைநீட்டி

கண்களில் அங்குமிங்கும்

தேடியவள் - இன்று

மீண்டும் எனை சிறுவயதிற்கே

அழைத்துச் செல்கிறாள்


அவள் தந்தையுடன் செல்லும்போது

திரும்பிப் பார்த்த

அவள் கடைக்கண் பார்வையில்Bookmark and Share

ஹார்மோன் மாற்றம்தந்தை வரவில்லையென்று


தானும் உண்ணாமல் உறங்காமல்

அழுது காத்துக்கிடந்தவள்


இன்று தானில்லாமல்

தந்தை உண்ணாமல் உறங்காமல்

அழுதுகிடக்க வைக்கிறாள்


Bookmark and Share

பூக்களின் வேதனைஉங்கள் ம(ண)னம் கொண்டவர்கள்

சுவாசத்திற்கு - எங்கள்

வாசம் வேண்டுமென்று

பிரித்து செல்லாதீர்கள்

எங்கள் உயிரின் நேசத்தை!


Bookmark and Share

மீண்டும் வா - நான் தெளிந்திட வா!


சலனமற்றுக் கிடந்த

என் மனக்குளத்தில்

உன் பார்வை கணையை

எய்துவிட்டு சென்றவளே


கலங்கி கிடக்கிறேன்

உன் கணையலைகளால்

மீண்டும் வா - நான்

தெளிந்திட வா!

Bookmark and Share

காதலி கரைகிறாள் - காகம் கரைகிறதுஅம்மா சொல்கிறாள்

எழுந்திரு

காகம் கரைகிறது

உறவினர் வரலாம்

வண்டி நிறுத்தம் செல்லென்று!


என் தாய்க்கு தெரியுமா

உன் பாட்டி சுட்ட வடைகளை

எனை அழைக்க

உன் தந்தைக்கு தராமல்

என்வீட்டுமேல் எறிந்தவள் நீயென்று!


Bookmark and Share

உறவுகள்தண்டவாளத்தின்

இணைகோடுகள்

ஒன்றிணைந்தாலும்

ஒன்று பிரிந்தாலும்

பயணம் இரத்தாகும்!


Bookmark and Share

லப் டப்என்னுள் இருக்கும்

நீ கேட்க

என் இதயத்தின்

மெல்லிசை


Bookmark and Share

அவளின் நினைவுப் பரிசுபெண்ணே

என்றும் எதிலும் நீயாக

நினைவுகளில் இருக்கிறாய்!


அன்றொரு நாள்

சந்தையில் - நீயென

உன் அக்கா

தோள் தொட்டுவிட்டேன்!


பின் என்ன

உன் வீட்டு காய்கறிகளை

தூக்கி வந்தேன்

கூலிக்காரனாய்
!


உன் வீட்டு முற்றத்திற்கு

ஒரு ரூபாய்காக!


Bookmark and Share

பிரிவு


இருவரும் ஒருவராய்

ஓர் பாதையில்!


பிரிகிறது

இருவேறு பாதைகளில்

மாற்றம் வேண்டி!


Bookmark and Share

அழுகைநெஞ்சத்தில்


பூகம்பம்!


கண்களில்
சுனாமி!Bookmark and Share

இடநெருக்கடிஇரவு மணி பத்து

மகள் கணவருடன்

அப்பா வீட்டில்!


வீட்டு திண்ணையில்

அப்பா! அம்மா!


Bookmark and Share

விருதுகளுக்காக வாழவில்லை


புகழுக்கு வாழ்பவரல்ல இவர்

கிடைத்த புண்ணியம் தொடர வாழ்பவர்

தகுதிக்கு தந்திருப்பின்

இருபதுகள் முன்பே

தந்திருக்க வேண்டும்

விரல் சப்பும் சிறுவனுக்கு

விருதெனும்போது

அவன் நடக்க கற்றுத் தந்தவனுக்கு

விருதில்லாமல் போனால்

சாலையில் பைத்தியமாய்

திரிபவனும் சாணியெறிவானென

இவ்விருது!

********
(உயர் விருதுகளை மதிக்கிறோம். தரும் விருதுகளை காலத்தே திறமையறிந்து கொடுங்கல். குற்றம் சொல்வார்களேயென தராதீர்கள் - இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. காலத்தேகிட்டா எதும் பயன்தராதென நம்பும் மக்களின் கருத்து)


Bookmark and Share
Related Posts with Thumbnails